Tuesday, April 24, 2012

மன அமைதி

      நம்மை சுற்றியிருக்கும் அனைவருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியொடு இருக்க வேண்டும் என்றும், மன அமைதி இருக்க வேண்டும் என்ற ஆசை  இருக்கும். மன அமைதியை  தொடந்து மகிழ்ச்சி தானக வரும்.

     துன்பங்களையும், தொல்லைகளையும், கவலைகளையும் மறந்து, சிறிது நேரமாவது மகிழ்ச்சியாக இருக்க யார்தான் விரும்பமாட்டார்கள். சரி, மன அமைதி என்பது என்ன? அதை  எப்படி அடைவது. மன அமைதி என்பது, உள் மனதில் உள்ள பாரங்கள் குறைந்தது போலான ஒரு நிலை. எடுத்துகாட்டாக, தொலைகாட்சியில் உன்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை  காணும் போதும், கடற்கரை  மணலில் அமர்நதிருக்கும் போதும், அல்லது பிடித்த நூல்( புத்தகம்) படிக்கும் போதும் ஏற்படும் உணர்வை போன்றது.

     உடலும், மனமும் எடை குறைந்தன போல தோன்றும். அப்பொழுது நீங்கள், மற்ற கவலைகளை  மறந்துவிட்டு உங்கள் மனதை கவனிக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கம் அல்லது நல்ல ஓய்வு போன்ற உணர்வு, உங்களை சமநிலையில் வைத்திருக்க அவசியமானது. இல்லையேல் வாழ்கை பொருளற்றது போல தோன்றும். ஆகவே, மன அமைதி மிக முக்கியமானது.

  மன அமைதி பெற சில வழிகள்.
  • மாற்ற முடியாதவற்றை  ஏற்றுகொள்ளுங்கள். அது உங்களின் ஆற்றலை  வெகுவாய் சேமிக்கிறது.
  •  உங்களை  மன உளைச்சளுக்கு உள்ளாக்கும், உரையாடல்களிலிருந்து விலகியிருங்கள்.
  • உணர்ச்சிவயப்படுவதை  குறைத்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம், உண்ர்வுப்பூர்வமாக பழகுவதை  குறைத்து கொள்ளுங்கள்.
  • மன்னிக்க கற்று கொள்ளுங்கள். அது மன உளைச்சளை  அறவே அழித்துவிடும்.
  • மற்றவரிடம் பொறாமை  கொள்வதை  விட்டுவிடுங்கள்.

      உங்களை விட, வேறு யாரும் உங்கள் வேலையை  செய்ய முடியாது. மனதில் அமைதி, உறங்கும்போது மட்டுமல்ல, கடினமான சூழ்நிலைகளிளும் வேண்டும். அது இருப்பின், எல்லா பிரச்சனைகளை  தீர்த்துவிடலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கருத்துரை