Friday, July 15, 2016





                   உங்கள் வீட்டில் தொழில்முனைவோர் இருக்கின்றார்களா!!!
                       
                                 அவர்களை முதலில் பாராட்டுங்கள்!!






உங்கள் வீட்டில் தொழில் முனைவோர் உள்ளார்களா அவர்களை முதலில்  பாராட்டுங்கள். ஏன் எனில் உங்களிடமிருந்து அவர்கள் தனித்துவமானவர்கள் 
தினமும் காலை முதல் மாலைவரை உழைத்து உழைத்து களைத்து மீண்டும் அவசரமாக வெந்தும் வேகாத சோற்றை கட்டிக்கொண்டு சென்று அவசரமாக சாப்பிடாமல் மாலையில் கசக்கி வெளியே எறியும் சிறை போன்ற பணியிலிருந்து உழன்று கொண்டிருக்கும் உங்களை விட தனித்துவமானவர்கள் அவர்கள் வாழ்க்கையின் மீது அளவுகடந்த பற்றுள்ளவர்கள் நிகழ்காலத்தில்  தன் குழந்தைகளோடும் குடும்பத்தினரோடும் தன்  நேரங்களை செலவிடும் பாக்கியவான்கள். 

தொழிமுனைவோர் என்பவர் யார்?

ஒரு தொழில்முனைவோர் தன் வெற்றின் இலக்கை தானே முடிவு செய்கிறார் 

அவரின் சிந்தனைகளுக்கு அவரே உயிர் அளிக்கின்றார் 

அவரின் நேரத்தினை அவரே கையாள்கிறார் 

வெற்றி தோல்விகளுக்கு  அவரே பொறுப்பானவர் 

உண்மையில் அவர் முற்றிலும் சுதந்திரமானவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது .
                    
                              தொழில் முனைவோரின் குடும்பத்தினரே!!


தொழில்முனைவோரின்  குடும்பத்தினரே அவர் எப்போதும் தன் இலக்கை நோக்கிய பயணத்தில் கவனமாக இருப்பர்.

ஒரு போதும் அவரை குறைகூறாதீர்கள் அவர் தன்னம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் மறந்தும் கூட பேசிவிடாதீர்கள். அவர் தொழில் வளர்க்கும் முயற்சியில் சில நேரங்களில் அவரின் வருமானம் கூட தடைபடலாம் எனினும் அவர் தளராது அவர் தொழில் வளர்ச்சிக்கு தேவையான வேளைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருப்பார் அது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் குடும்பத்தினாராகிய நீங்கள் அவர்களுக்கு தோல் கொடுத்து நல்ல ஆலோசனைகளும் கொடுப்பதே சிறந்தது. இவற்றை செய்யாமல் "நீ தொழில் செய்து கிழித்தது போதும் போய் ஒரு தொழிற்சாலையில் வேலை செய் " என்று இதுபோன்ற தன்னம்பிக்கையை  உடைக்கும் விதத்தில் பேசுவது தவறல்லவா? 
வேலை செய்தே காலத்தை ஓட்டும் குடும்பத்தின் பின்னணியில் இருந்து தொழில்முனைவோராக வருவது எளிதாக  நடந்துவிடுமா   என்ன?

எந்த தொழிலும் ஒரே நாளில் கோடி கோடியாக கொட்டிவிடும் என்ற நினைப்பினை மாற்றுங்கள். குடும்பத்தினரே!

ஒரு மூங்கில் மரம் முளை விடுவதற்கு ஐந்து வருடங்களாகுமாம் அதுவரை ஒரு அறிகுறி கூட இருக்காதாம். அதன் பின் காடாக வளரும் அது போலே தான் தொழிலும்  விதை வளர நேர அவகாசம் தேவை என்பதை தொழில் முனைவோர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினரும் நண்பர்களும் உணர வேண்டும். உங்களால் தோள்கொடுக்க முடியாவிட்டால் தள்ளி நின்றுவிடுங்கள் இதுவே நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரும் உதவியாகும்.

நன்றி 

 இது நான் அனுபவத்தில் நடந்ததை உங்களுக்கு பகிர்கிறேன் உங்களுக்கும் இதுபோன்று அனுபவங்கள் கிடைத்திருக்கும். எனினும்  எதிலும் துவண்டு விடாமல் வீறு கொண்டு வெற்றிநடை போடுவோம்!!! 

-தன்னம்பிக்கை வேண்டும் 

























No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கருத்துரை