Friday, September 16, 2011

ஆரோக்கியமான ஸெல்ப் இமேஜ் வளர்த்துக்கொள்ள ஏழு படிகள்

ஆரோக்கியமான ஸெல்ப் இமேஜ் (SELF IMAGE)வளர்த்துக்கொள்ள ஏழு படிகள் 

1. இருப்பு கணக்கு 
   
              நம்மை நாமே சரியாக பார்த்துகொண்டால் இருப்பு கணக்கை எடுக்க ஆரம்பித்துவிடலாம்  நம்மிடம் என்னென்ன நல்லியல்புகள் இருக்கின்றன .
என்னென்ன நேர்மறையான இயல்புகள் இருக்கின்றன . இப்படி கேட்டு அதற்கான விடைகளை பெற்றுக் கொள்ளும்போது நம்மிடம் நமக்கே உரிய எதோ ஒன்று இருப்பது தெரியவருகிறது .

2. ஒப்பிட்டு பார்க்காதே.
      
            உன்னை பிறரோடு ஒப்பிட்டு பார்க்கும் பொறிக்குள் சிக்கிகொள்ளாதே .
   எதார்த்தத்துக்கு புறம்பாக நம்மை பிறரோடு ஒப்பிட்டு பார்க்கும்போது மிஞ்சுவதெல்லாம் தாழ்வுமனப்பான்மை மட்டுமே .


3. மனதுக்கு தீனி போடு 
     
             உற்சாகம் தருகின்ற நேர்மறையான செய்திகளை மனதிற்குள் செலுத்த கிடைக்கும் சந்தர்பங்களை பயன்படுத்திகொள்

4.யாரை கவனிக்கிறாய் என்பதில் கவனமாக இரு
         
            உன்னை யாரவது குறைத்து பேசினாலோ அல்லது உன்னை மட்டம் தட்டினாலோ அவர்களை உதாசீனப்படுத்திவிடு .உன் திறமைகள் மீது நம்பிக்கை வை .உன் லட்சியங்களை நோக்கி துவளாது நடைபோடு.

5. சரியான சூழலை உருவாக்கிக்கொள் .
    
         யாரவது நண்பர்கள் உன்னை கீழே இழுக்கிறார்கள் என்றால் அவர்கள் உன்னுடைய  உண்மையான நண்பர்கள் அல்ல என்பதை உணர்ந்திடு .

6. சாதனைகளை அடிக்கோடிட்டு வை .

             எப்போதும் வெற்றி அல்லது சாதனைகளை நோக்கக் கற்றுக்கொள் .அது சிறியதாக இருக்கலாம் அல்லது பெரியதாக இருக்கலாம்.

7. ஆரோக்கியமாக உன்னுடனே பேசிக்கொள் .

           என்னிடம் திறமை இருக்கிறது என்று சொல்லிக்கொள் .என்னிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிக்கொள் .நான் மதிப்புமிக்கவன் என்று சொல்லிகொள் .


முயற்சித்து பார் பலன் தரும் .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் .


4 comments:

Note: Only a member of this blog may post a comment.

கருத்துரை