Thursday, June 6, 2013

நம்பிக்கையற்றவர்கள் யார் ? யார் ? அவர்களின் அடையாளம் என்ன ?

   

                                      உங்களை நீங்களே மதிப்பிடுங்கள் 

கீழ்காணும் இவற்றில் உங்களுக்கு ஏதேனும் பொருந்தும் என்றால்
நீங்கள் அவநம்பிக்கையுடன் இருக்கீர்கள் என்று உண்மை .


1. அவ நம்பிக்கையாளர்கள் புலம்புவதற்கு எதுவாக எந்த பிரச்னையும் இல்லையென்றால் சோகமாகிவிடுவார்கள்.

2. நன்றாக இருக்கும்போதே இந்த மகிழ்ச்சி நிலைக்காமல் போய்விடுமோ  என்று பயந்து கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

3. குறைகளை முறையிடும் கவுண்டர்களிலே தங்கள் வாழ்கையின் பெரும் பகுதியை செலவழிப்பார்கள் 

4. எவ்வளவு இருட்டாக இருக்கிறது என்பதை காண்பதற்காக  எப்போதும் விளக்குகளை  அனைத்தே வைத்திருப்பார்கள்.

5. நாளை சுகமில்லாமல் போய்விடுமோ என்று எண்ணுவதால் தங்களது  திடகாத்திரமான உடல் நிலையை கூட அனுபவிக்க முடியாதவர்கள்.

6. மோசமான நிலையை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் எது நடந்தாலும் அதை மோசமாக ஆக்கிவருபவர்கள்.

7. இனிப்பு பணியாரத்தை பார்க்காமல் அதிலுள்ள ஓட்டைகளை மட்டுமே பார்பவர்கள் .

8. தங்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகளை ( BLESSINGS ) மறந்துவிட்டு 
தங்களது பிரச்சனைகளையே எண்ணுபவர்கள்.

அடுத்த பதிவில் தன்னம்பிக்கை உடையவர்களின் செயல்பாடுகள் பற்றியும் உங்களை  தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றும் சில வழிகளை  பற்றி பார்க்கலாம் நண்பர்களே! 

- தன்னம்பிக்கை வேண்டும் 


கருத்துரை