Monday, September 19, 2011

உனக்குள் இருக்கும் செல்வதை உணர்ந்திடு

       உன்னை சுற்றி இருப்போர் மகிழ்ச்சியையும் செல்வதையும் அடைந்து சாதிப்பதை பார்த்து உனக்குள் கேட்டுகொண்டிருபாய்  அல்லவா!

  1. என் செயல்பாட்டில் என்ன குறை ? 
  2. அவர்கள் செய்யும் எதை நான் செய்யாமல் விட்டுவிட்டேன் ?
  3. அவர்களை போன்ற வெற்றியை நன் எப்படி சாதிப்பது ?

      வெற்றியை சாதிக்காமல் போய்விடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன 
சாக்குபோக்குகள் ,கழிவிரக்கம் ,விவரம் தெரியாமல் இருப்பது இவை அனைத்தும் தோல்விக்கான காரணங்கள் ஆகும் ( இவற்றை தகர்த்து எறிவதற்கான வழியை காண்போம் ).

௧. இதை உன்னுடையதாக வைத்துக்கொள்   
         உன்னுடைய செயல்களுக்கு நீயே பொறுப்பு .இந்த பகுதியை எனக்கு பயனுள்ளதாக ஆக்கிகொள்வேன் என்று உனக்குள் கூறிக்கொள் .தனிப்பட்டதாகவும் உன்னுடயதாகவும் இதைக்கொள்  இதுவே உன் முன்னேற்றத்திற்கு செயல் திட்டம் என்று கொள்

        தன்னிடமிருக்கும் அணைத்து ஆற்றல்களையும் சக்திகளையும் இலக்கை அடைவதை நோக்கி குவித்து வைத்திருக்கும் செறிவான முயற்சி இறுக்கும்போது வெற்றியை அடைவதற்கு மிகப்பெரிய சாத்தியம் நம்மை வந்தடைகிறது .

         ஈடுப்பாட்டோடு எதையும் சரியாக ஆரம்பித்தால் எதுவும் இயல்பாக நடேந்தரும்  கைமேல் இருக்கும்  காரியத்தின் மீது கண்வைக்கும்போது விரைவில் வெற்றியை சாதிக்கிறோம் .


Friday, September 16, 2011

ஆரோக்கியமான ஸெல்ப் இமேஜ் வளர்த்துக்கொள்ள ஏழு படிகள்

ஆரோக்கியமான ஸெல்ப் இமேஜ் (SELF IMAGE)வளர்த்துக்கொள்ள ஏழு படிகள் 

1. இருப்பு கணக்கு 
   
              நம்மை நாமே சரியாக பார்த்துகொண்டால் இருப்பு கணக்கை எடுக்க ஆரம்பித்துவிடலாம்  நம்மிடம் என்னென்ன நல்லியல்புகள் இருக்கின்றன .
என்னென்ன நேர்மறையான இயல்புகள் இருக்கின்றன . இப்படி கேட்டு அதற்கான விடைகளை பெற்றுக் கொள்ளும்போது நம்மிடம் நமக்கே உரிய எதோ ஒன்று இருப்பது தெரியவருகிறது .

2. ஒப்பிட்டு பார்க்காதே.
      
            உன்னை பிறரோடு ஒப்பிட்டு பார்க்கும் பொறிக்குள் சிக்கிகொள்ளாதே .
   எதார்த்தத்துக்கு புறம்பாக நம்மை பிறரோடு ஒப்பிட்டு பார்க்கும்போது மிஞ்சுவதெல்லாம் தாழ்வுமனப்பான்மை மட்டுமே .


3. மனதுக்கு தீனி போடு 
     
             உற்சாகம் தருகின்ற நேர்மறையான செய்திகளை மனதிற்குள் செலுத்த கிடைக்கும் சந்தர்பங்களை பயன்படுத்திகொள்

4.யாரை கவனிக்கிறாய் என்பதில் கவனமாக இரு
         
            உன்னை யாரவது குறைத்து பேசினாலோ அல்லது உன்னை மட்டம் தட்டினாலோ அவர்களை உதாசீனப்படுத்திவிடு .உன் திறமைகள் மீது நம்பிக்கை வை .உன் லட்சியங்களை நோக்கி துவளாது நடைபோடு.

5. சரியான சூழலை உருவாக்கிக்கொள் .
    
         யாரவது நண்பர்கள் உன்னை கீழே இழுக்கிறார்கள் என்றால் அவர்கள் உன்னுடைய  உண்மையான நண்பர்கள் அல்ல என்பதை உணர்ந்திடு .

6. சாதனைகளை அடிக்கோடிட்டு வை .

             எப்போதும் வெற்றி அல்லது சாதனைகளை நோக்கக் கற்றுக்கொள் .அது சிறியதாக இருக்கலாம் அல்லது பெரியதாக இருக்கலாம்.

7. ஆரோக்கியமாக உன்னுடனே பேசிக்கொள் .

           என்னிடம் திறமை இருக்கிறது என்று சொல்லிக்கொள் .என்னிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிக்கொள் .நான் மதிப்புமிக்கவன் என்று சொல்லிகொள் .


முயற்சித்து பார் பலன் தரும் .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் .


கருத்துரை