உன்னை சுற்றி இருப்போர் மகிழ்ச்சியையும் செல்வதையும் அடைந்து சாதிப்பதை பார்த்து உனக்குள் கேட்டுகொண்டிருபாய் அல்லவா!
- என் செயல்பாட்டில் என்ன குறை ?
- அவர்கள் செய்யும் எதை நான் செய்யாமல் விட்டுவிட்டேன் ?
- அவர்களை போன்ற வெற்றியை நன் எப்படி சாதிப்பது ?
வெற்றியை சாதிக்காமல் போய்விடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன
சாக்குபோக்குகள் ,கழிவிரக்கம் ,விவரம் தெரியாமல் இருப்பது இவை அனைத்தும் தோல்விக்கான காரணங்கள் ஆகும் ( இவற்றை தகர்த்து எறிவதற்கான வழியை காண்போம் ).
௧. இதை உன்னுடையதாக வைத்துக்கொள்
உன்னுடைய செயல்களுக்கு நீயே பொறுப்பு .இந்த பகுதியை எனக்கு பயனுள்ளதாக ஆக்கிகொள்வேன் என்று உனக்குள் கூறிக்கொள் .தனிப்பட்டதாகவும் உன்னுடயதாகவும் இதைக்கொள் இதுவே உன் முன்னேற்றத்திற்கு செயல் திட்டம் என்று கொள்
தன்னிடமிருக்கும் அணைத்து ஆற்றல்களையும் சக்திகளையும் இலக்கை அடைவதை நோக்கி குவித்து வைத்திருக்கும் செறிவான முயற்சி இறுக்கும்போது வெற்றியை அடைவதற்கு மிகப்பெரிய சாத்தியம் நம்மை வந்தடைகிறது .
ஈடுப்பாட்டோடு எதையும் சரியாக ஆரம்பித்தால் எதுவும் இயல்பாக நடேந்தரும் கைமேல் இருக்கும் காரியத்தின் மீது கண்வைக்கும்போது விரைவில் வெற்றியை சாதிக்கிறோம் .
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.