Sunday, September 22, 2013

வாழ்க்கை என்பது உடை ஒத்திகை பார்ப்பது போல் அல்ல

 

 
                                                           

                                                                    


 நீங்கள் எந்த தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை - வாழ்க்கை என்கிற ஆட்டத்தில் ஒரே ஒரு வாய்ப்பே நமக்கு இருக்கிறது . எதிர்கால தலைமுறைகளை பந்தய பணமாக வைத்தே இந்த ஆட்டத்தை நாம் ஆடுகிறோம் .

நிலவின் கீழே துயில் கொண்டிருந்தான்
    சூரியனின் கீழே  குளிர் காய்ந்து கொண்டிருந்தான்
             செய்யத்தான் போகிறோம் என்றே வாழ்ந்திருந்தான்  -எதுவும்
                          செய்யாமலே மாய்ந்துவிடான் -JAMES ALLBERY

மேலே  உள்ள கூற்றின்படி அவர் கூறும் செய்தி  என்னவென்றால்

 யோசித்துகொண்டே இருக்காமல் செயலில் இறங்குவதையே குறிக்கிறது
இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒரு போதும் நாளை வரை தள்ளி போடாதீர்கள் - BENJAMIN FRANKLIN 

வெற்றி பெற்றவர்கள் அனைவருமே தம் வேலைகளை  தள்ளிபோட விரும்பி பின்னால் சில காரணங்களால் அவ்வாறு  செய்ய முடியாமல் போனவர்கள்
தான் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

தள்ளிபோடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். தள்ளிபோடும் பழக்கத்தை தள்ளி தள்ளி வைப்பதற்கு இதுவே சிறந்ததொரு தருணமல்லவா  நண்பர்களே  இனியும் காலம் தாமதிக்காமல் செய்வனவற்றை அன்றே முடித்து வாழ்க்கையில் ஏற்றம் பெற
 -தன்னம்பிக்கை வேண்டும்
வாழ்த்துகிறது




கருத்துரை