Thursday, August 8, 2013

முடியாது என்று சொல்ல தயங்காதீர்கள்.

   உங்கள் நண்பர்களில் ஒருவர் உங்களிடம் ஒரு உதவி செய்யுமாறு கேட்கிறார் என்று வைத்துகொள்வோம். அதற்கு நீங்கள் உடனே என்ன பதில் சொல்வீர்கள். செய்கிறேன் என்றா? அல்லது முடியாது என்றா ?
    பொதுவாக நாம் அனைவருமே "செய்கிறேன்" என்று தான் சொல்லுவோம்.  அது எவ்வளவு பெரிய தவறு  என்று தெரியுமா ? நம்மால் அவர் கேட்பதை செய்ய முடியுமா,  அவர் கேட்கும் காலத்திற்குள் செய்ய முடியுமா என்பதை கணக்கிடாது எந்த பதிலும் சொல்ல கூடாது.
    "செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு செய்யாமல் போனால் அதன் பாதிப்பு என்ன என்பது நமக்கு தெரியாத போது முடியாது என்று சொல்வது தான் நீங்கள்  உங்கள் நண்பருக்கு செய்யும் மிகசிறந்த உதவியாகும். உங்களுக்கும் மனம் குழம்பாது இருக்கும்.

கருத்துரை